Header Ads



ஜனாஸா அறிவித்தல்

அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் முன்னாள் பொருளாளரும், மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாக சபை தலைவருமான மெளலவி ஏ. ஆர். எம். றுஹுல் ஹக் (வயது 80) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார். அன்னாரின் ஜனாஸா குப்பியாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல்வாதிகள், உலமாக்கள் உட்பட அநேகர் கலந்து கொண்டனர்.

ஏழு பிள்ளைகளின் தந்தையான இவர் அரபு - தமிழ், அரபு - சிங்களம் மொழி பெயர்ப்புத்துறையில் தேர்ச்சி பெற்றவர். கல்லூரியின் முன்னாள் பிரதம முகாமைத்துவ பணிப்பாளராகவும், ராஜகிரிய தாருல் ஈமான் அமைப்பின் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். கல்எலிய மகளிர் அரபு கல்லூரியின் வளர்ச்சிக்காக இவர் அயராது உழைத்துள்ளார்.

அல்லாஹ் ஹுதஆலா அன்னாரின் பாவங்களையும், குறைகளையும் மன்னித்து, அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தெளஸை வழங்கவும், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளிக்கவும் பிரார்த்திப்போமாக..!

No comments

Powered by Blogger.