சூடானில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் லண்டனில் பிரிப்பு
தலை ஒட்டிப் பிறந்த இரு குழந்தைகளை, அறுவை சிகிச்சை மூலம் பிரிட்டன் டாக்டர்கள் பிரித்துள்ளனர். ரிட்டல் மற்றும் ரிடாஜ் கபவுரா என்ற இரு குழந்தைகளும், 2010 அக்டோபரில், சூடான் தலைநகர் கார்ட்டூமில் பிறந்தனர். பிறக்கும் போதே, தலை ஒட்டிப் பிறந்தனர். இவர்களின் மண்டை ஓடும் ஒட்டியே இருந்தது. அதோடு, சில நரம்புகள் இருவருக்கும் சேர்ந்தே இருந்தன. ஆனால், மூளைத் திசுக்கள் பிரிந்து இருந்தன.
உலகில், ஒரு கோடி குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே, இதுபோன்ற அரிய உடற்சிக்கலிலும் உயிர்வாழும். அதோடு, ஒரு லட்சம் பிறப்புகளில் ஒன்றில் மட்டும்தான், இதுபோன்று தலை ஒட்டிப் பிறப்பது நிகழும். சூடானில், இதுபோன்ற சிக்கலான உடற்பிரச்னைகளுக்கு, அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லை. அதோடு, குழந்தைகளின் பெற்றோருக்கு, அதற்கேற்ப பொருளாதார வசதியும் இல்லை. அதனால், பிரிட்டன் குழந்தைகள் அறக்கட்டளையான, "பேசிங் தி வேர்ல்டு' அமைப்பை நாடினர். அந்த அமைப்பின் உதவியுடன், இக்குழந்தைகள் லண்டனில் உள்ள குழந்தைகளுக்கான, கிரேட் ஓர்மண்டு தெரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ரிடாஜின் உடலில் இருந்து ரிட்டலின் மூளைக்கு ரத்தம் கணிசமான அளவில் அனுப்பப்பட்டதாலும், ரிட்டலின் மூளையில் இருந்து திரும்பி வரும் ரத்தம், ரிடாஜின் இதயத்திற்கே வருவதாலும், இவர்களைப் பிரிப்பது மிகக் கடினமான ஒன்றாகக் கருதப்பட்டது. அறுவை சிகிச்சையில் மிகச் சிறு தவறு நிகழ்ந்தாலும் கூட, அது இரு குழந்தைகளையும் நிரந்தரமாகப் பாதிக்கும் என்பதால், மிக மிகக் கவனமாக, அறுவை சிகிச்சை நடந்தது. வெற்றிகரமான அந்த சிகிச்சையின் முடிவில், இருவரும் பிரிக்கப்பட்டனர். தற்போது, இருவரும் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Post a Comment