யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்திற்கு...!
யாழ். மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் விபரங்களைத் தொழில் திணைக்களம் திரட்டி வருகின்றது. தொழில் தேடுவோரின் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் திணைக்களம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
யாழ். குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பிரதேச ரீதியான அபிவிருத்தித் திட்டத்தித்தைத் தயாரிப்பதற்கும் பொருத்தமான பயிற்சிகளை எதிர்காலத்தில் வழங்குவதற்கும் இலவாக வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன.
யாழ். மாவட்டத்தில் முதற் தடவையாக தொழில் தேடுவோர் விபரம் திரட்டப்படுகின்றது. தொழில் இல்லாமல் இருக்கும் இளைஞர், யுவதிகள் தத்தமது பிரிவு கிராம சேவையாளர்களிடம் உரிய படிவங்களைப் பெற்றுப் பூரணப்படுத்தி வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment