Header Ads



மையத்து வீட்டிலும் தற்கொலை தாக்குதல் - 31 பேர் வபாத்தானார்கள்

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி மலைபகுதியில் உள்ள லோவர்டிர் மாவட்டத்தில் ஜந்தால் நகரம் உள்ளது. அங்கு பகத்கான் என்ற தச்சு தொழிலாளி சாலை விபத்தில் வபாத்தானார். அவரது இறுதி சடங்கு நடந்தது. அதில் 200 பேர் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் கூட்டத்துக்குள் தற்கொலைதாரி ஊடுருவி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 31 பேர் வபாத்தானார்கள். 63 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே வபாத்தானார் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இறந்த தச்சு தொழிலாளி பகத்கான் மாஷ்வானி என்ற மலைவாழ் இனமக்கள் அமைப்பின் உறுப்பினர். இது தலிபான்களுக்கு எதிரானது. எனவே இவரது இறுதி சடங்கின் போது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கு இது வரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.  

No comments

Powered by Blogger.