அப்துல்கலாம் சொன்ன குட்டிக்கதை
"அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி என அடையாறு அவ்வை இல்லப் பள்ளி மாணவியரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது, மாணவர்கள் நல்ல பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன் வளர வேண்டும். மாணவர்கள் லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கி, உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணமாக, மரியா கபாச்சியின் கதையைக் கூறுகிறேன். இந்த மரியா கபாச்சி நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, அவனின் தாய் சிறை பிடிக்கப்பட்டார். பின், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அச்சிறுவன் தவித்தான். அவனுடைய ஒன்பதாவது வயதில் ஒரு மருத்துவமனையில் அவனது தாய் சந்தித்தார்.
பின், அவர்கள் அமெரிக்காவில் உள்ள தனது மாமா வீட்டில் தஞ்சமடைந்தனர். மரியா கபாச்சி கல்வியில் சிறந்து விளங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிறகு, ஜீன் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்கான நோபல் பரிசு வென்றார். இது, அவரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.காந்தியின் ஒன்பதாவது வயதில் அவரின் தாய் ஒரு போதனை நிகழ்த்தினார். துன்பத்தில் இருக்கும் ஒருவரை மீட்டால், அது உன்னை ஒரு மனிதனாக மாற்றும் என்பது தான் அது. எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் அறிவு தீபமாக விளங்கினார்.
நூறு கோடி மக்கள் தான் இந்தியாவின் சொத்து. எண்ணம் உயர்வாக இருந்தால் பணிகள் உயரும். 2020 திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை, வேலை வாய்ப்பை அதிகரிக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளும் அந்த லட்சியத்தை அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனது வழிகாட்டியே திருக்குறள் தான். அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. தூக்கத்தில் கனவு வராது. கனவு காண்பவர்களால் தூங்க முடியாது. எனவே, இளைஞர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

Post a Comment