யாழ்ப்பாணத்தில ''சுதந்திர ஊடகக் குரல்'' அமைப்பு உதயம்
நாட்டில், ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் வன்முறைகளை அடுத்து சுதந்திரமான புதிய செயற்திறன் கொண்ட ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியின் பயனாக 'சுதந்திர ஊடகக் குரல்' எனும் ஊடக அமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் அமைப்பு ஆரம்பிப்பதற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைப்பிற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்று அமைப்பின் யாப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
நாட்டில், ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை அடுத்து சுதந்திரமானதும் புதிய செயற்திறன் கொண்டதுமான ஊடகவியலாளர் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுந்தது. அதன் அடிப்படையில் இன்று ஊடக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு 'சுதந்திர ஊடகத்தின் குரல்' எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Post a Comment