அமைச்சர் மேர்வினுக்கு எதிராக விசேட பூஜை
![]() |
| அமைச்சர் மேர்வின் சில்வா |
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் வேட்டைத் திருவிழாவிற்கு பலி கொடுக்கவென கொண்டுவரப்பட்ட விலங்குகளை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக விசேட பூஜை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறும் மிருக பலியினை தற்காலிகமாக தடைசெய்யுமாறு சிலாபம் மாவட்ட நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றுக் காலை தனது சகாக்களுடன் முன்னேஸ்வரம் கோயிலுக்கு சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா பலி கொடுக்க இருந்த விலங்குகளை வாகனத்தில் தூக்கிச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மிருக பலிக்கு இடம்கொடுக்கப்பட மாட்டாது எனவும் மிருக பலியினை தடுத்து நிறுத்தியதற்கு எதிராக எவர் தேங்காய் உடைத்தாலும் பருவாயில்லை எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று தெரிவித்திருந்தார். அத்தோடு எங்கெங்கெல்லாம் மிருகபலி கொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தான் இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment