ஈராக்கில் எரிவாயு திட்டம் - இலங்கைக்கு கொந்தராத்து
ஈராக்கில் பாரிய பொறியியல் திட்டத்தை செய்யும் கொந்தராத்து இலங்கை நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது இது இலங்கையின் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. நூறு சதவீதம் இலங்கைக்கு சொந்தமான வெலா இன்டர் நஷனல் என்ற நிறுவனம் சர்வதேச ரீதியில் இத்துறையில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க, ஜப்பான், ஜேர்மனி மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனங்களுடன் இந்த கேள்விப்பத்திரத்தில் விண்ணப்பித்த பின்னரே தெரிவாகியுள்ளது.
ஈராக்கின் மின்சாரத்துறை அமைச்சின் கீழ் இந்த கொந்தராத்து இலங்கை நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாக பெஞ்சமீன் தமது நிறுவனம் ஈராக்கிய மின்சாரத் துறை அமைச்சுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி யிடம் கையளித்தார்.
எரிவாயு மின்சக்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி ஈராக்கிய அரசாங்கம் தங்கள் நாட்டில் மின்சார தேவையை திருப்திகரமான முறையில் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்த இலங்கை நிறுவனம் தமது பணிகளை அடுத்த மாதம் ஈராக்கில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நிறுவனத்தின் சார்பில் ஈராக்கில் கல்வித் தகுதியும் அனுபவமும் கொண்ட 56 பொறியியலாளர்கள் இத்திட்டத்தில் பணியாற்றவுள்ளனர். இந்த நிறுவனம் கிளிநொச்சியில் இருந்து சுன்னாகம் வரையில் 132 கிலோவோட் அதி சக்தி வாய்ந்த மின்சார இணைப்பு கேபிள்களை பொருத்திய சாதனையை ஏற்படுத்தியிருந்தது.

Post a Comment