Header Ads



கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு


கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி சுமார் 300 படையினரை அரசாங்கம் குவித்து வைத்துள்ளது. 

ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பின்லேடனின் மரணத்தை அடுத்து பேரணிகள் நடைபெறலாம் என்று கருதப்படுவதாலேயே, அவற்றை முறியடிக்கும் நோக்கில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. 

 காவல்துறையின் கலகம் அடக்கும் பிரிவு, சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 300 படையினரே அமெரிக்கத் தூதரகப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகளவு படையினர் இங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள சூழலில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வந்துள்ளதால், பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. 

என்னும், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் முக்கிய கலந்துரையாடல் மையமாக அமெரிக்கத் தூதரகம் மாறியுள்ள நிலையில், அதனைச் சுற்றி படையினரைக் குவித்துள்ள அரசின் நடவடிக்கை சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 

No comments

Powered by Blogger.