Header Ads



கொல்லப்பட்டது ஒஸாமாவா..? நம்பமறுக்கும் அமெரிக்கர்கள்

கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா மரபணு (டி.என்.ஏ.) சோதனை செய்துள்ளது. ஆனாலும் இதை அமெரிக்க நாட்டினரே பெரும்பாலனோர் நம்பவில்லை. அமெரிக்கா பின்லேடன் முகத்தை மட்டும் வெளியிட்டு உள்ளது. முழு உடல் படத்தை வெளியிடவில்லை.

மேலும் பல்வேறு கோணத்திலும் படம் வெளியிடப்பட வில்லை. எனவே இது பின்லேடன்தானா? என நம்ப மறுக்கிறார்கள். பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் உடனடியாக கடலில் மூழ்கடித்து விட்டது. அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் ஹரீஷ் ரஷீத் கூறும்போது, பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தான் என்பதையோ அவர் கொல்லப்பட்டார் என்பதையோ நம்ப முடியவில்லை.

அவரை இவ்வளவு வேகமாக அடக்கம் செய்தது சந்தேகமாக உள்ளது. இது அமெரிக்கா நடத்தும் நாடகம் என கருதுகிறேன் என்றார். கமல்கான் என்பவர் கூறும் போது, இது எல்லோரையும் முட்டாளாக்கும் முயற்சி என்று கருதுகிறேன் என்றார். அதிபர் ஒபாமாவுக்கு தீவிரவாதிகள் தொடர்பாக ஆலோசனை கூறும் ஜான் பிரானன் கூறும்போது, கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்பதை பலர் மறுக்க முயற்சி செய்யலாம். அது பின்லேடன்தான் என்பதை அமெரிக்கா பலமாக உறுதி செய்யவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.