ஒஸாமா பின்லேடன் தங்கியிருந்த வீடு
யாரும் நுழைய முடியாத வகையில். வெளி தொடர்புக்காக சில, நம்பிக்கையான உதவியாளர்களை மட்டும் வைத்திருந்தார் ஒஸாமா . அவர்கள் மூலம் தான் எந்த தகவலும் வெளியே செல்லும் அல்லது ஒசாமாவுக்கு கிடைக்கும்.
கூரியர் தபால் மூலம் மட்டுமே இவருக்கு தகவல்கள் வந்தன. அது மூலமே இவரும் தகவல்களை அனுப்பினார். தபால் கொண்டு செல்லப்படுவதை நான்கு ஆண்டுளாக அமெரிக்க உளவுப் படைகள் கண்காணித்தன. இதன் மூலம் தான், ஒசாமா பதுங்கியிருந்த வீடு தெரிய வந்தது.
இந்த வீடு 2005ல் கட்டப்பட்டது. அருகில் இருந்த வீடுகளை விட, 8 மடங்கு பெரியது. வீட்டை முதலில் பார்த்த அமெரிக்க படைகளே ஆச்சரியம் அடைந்தன. காரணம், வீட்டைச் சுற்றி 12 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் நுழைய முடியாத வகையில், இரண்டு அடுக்கு "கேட்' அமைக்கப்பட்டிருந்தது.
வீட்டில், போன் அல்லது இன்டர்நெட் இணைப்புகள் இல்லை. குப்பை கூட வெளியே செல்லக் கூடாது என்பதால், அவை வீட்டுக்கு உள்ளேயே எரிக்கப்பட்டன. அவ்வளவு பாதுகாப்பு இருந்தும், ஒசாமாவை அமெரிக்க படைகள் கண்டுபிடித்து அழித்து விட்டன.

Post a Comment