Header Ads



இஹ்வானுல் முஸ்லிமின் அரசியல் கட்சியை ஆரம்பித்தது

எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு புதிய அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தின் அரைவாசி ஆசனங்களை இலக்குவைத்துப் போட்டியிடவுள்ளதாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் 30 வீதமான ஆசனங்களுக்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி ‘சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் தலைவராக முஹமூத் முஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்சி மதசார்பான கட்சி அல்லவென்றும், இஸ்லாமிய பின்னணியில் உருவாக்கப்பட்டது எனவும் அதன் தலைவர் முஸ்ரி தெரிவித்தார். இந்த கட்சியில் கிறிஸ்தவ, முஸ்லிம்கள் இணையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடை பெறவுள்ளது. 

எகிப்தில் தற்போதைய நிலையில் தேசிய மட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரே அமைப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மாத்திரமே உள்ளமை குறிப்பிட த்தக்கது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முந்தைய தேர்தல்களில் சுயேட்சையாகவே போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments

Powered by Blogger.