ஏப்ரல் 29 இல் ஒபாமா கையெழுத்திட, மே 2 இல் ஒஸாமா வீரமரணம்
முஸ்லிம் போராளி ஒசாமா பின் லேடனை கொலை செய்ய ஏப்ரல் 29ம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் திட்டம் தீட்டி, அதை வழிநடத்திச் சென்ற அமெரிக்கா, எப்ரல் 29ம் தேதியன்று ஒசாமாவை கொல்ல அமெரிக்க ராணுவத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
அலபாமாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அதிபர் ஒபாமாவுக்கு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவு அதிகாரிகள் ஒசாமவை நெருங்கி விட்ட செய்தியை கூறினர். அதனை கேட்ட ஒபாமா, ஒசாமாவை கொன்று விடுமாறு உத்தரவிட்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலன் தான் அதிபர் ஒபாமாவின் உத்தரவை தயார் செய்து அதனை படை கமாண்டர்களுக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது குறித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.

Post a Comment