'இலங்கையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு'
தருஸ்மன் அறிக்கை தொடர்பாக சர்வதேசத்தின் நடவடிக்கைகளினால் இலங்கையின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை தோன்றியுள்ளதாக "த வோல் ஸ்ரிட் ஜெர்னல்" சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள பெரும்பான்மையான கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவையாக இருக்கலாம் என அந்த சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது, இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் மாத்திரம் அல்ல எனவும் அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment