Header Ads



அரசாங்கத்திற்கு அதிபர், ஆசிரியர் சங்கங்கள் எச்சரிக்கை

அதிபர் சேவை மற்றும் கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றின் யாப்புகளை மிறிச் செயற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ள பத்து அதிபர்,ஆசிரியர் சங்கங்கள் இதனை நிறுத்தாவிடின் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக எச்சரித்துள்ளன.

அகில இலங்கை அதிபர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 10 அதிபர்,ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் மகாநாட்டிலேயே இந்த வலியுறுத்தலையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளன.

தற்போது அதிபர் சேவை யாப்பையும் கல்வி நிர்வாக சேவை யாப்பையும் மீறி நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அதிபர் சேவை யாப்பை மீறி அதிபர்கள் இல்லாது அவருக்குப் பதிலாக கடமையாற்றும் 2118 பேரை நிரந்தரமாக நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. இதேபோல் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள 700 பேரை அமைச்சரவை பத்திரம் மூலம் நிர்வாக சேவைக்குப் பரீட்சையின்றி உள்வாங்க நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. தமக்குத் தேவையானவர்களை நியமிப்பதன் மூலம் கல்வித்துறை அரசியல் மயமாக்கப்படுகின்றது. எனவே இதனை உடனடியாக நிறுத்துமாறு கோருகின்றோம்.

மேலும் கல்வியமைச்சர் ஆசிரியர் தொழிற்சங்களுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக கல்வித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். 1966 ஆம் ஆண்டு உலக ஆசிரியர் சாசனத்துடன் அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் இது மீறுவதாகவுள்ளது. எனவே அதிபர் சேவை யாப்பையும் கல்வி நிர்வாக சேவை யாப்பையும் மீறும் செயற்பாடுகளையும் கல்வியமைச்சரின் தன்னிச்சையான கல்வித் திட்ட செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு கோருகின்றோம். இல்லாவிட்டால் ஆசிரியர்,அதிபர் தொழிற்சங்கங்களை ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குகிறோம் என எச்சரிக்கின்றோம் எனவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அதிபர்,ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது

No comments

Powered by Blogger.