Header Ads



ஈரான், பஹ்ரைனிலும் போராட்டம்

ஈரான் மற்றும் பஹ்ரைனிலும் எதிர்கட்சியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

எகிப்து மற்றும் துனிசியாவில் நடந்த எழுச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலைநகர் டெஹ்ரானில் பேரணி நடத்த எதிர்க்கட்சி தலைவர்கள் மோசவி, மஹ்தி கரோபி ஆகியோர் அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான் அரசு அவர்களை கடந்த வாரம் முதல் வீட்டுக் காவலில் வைத்தது.

இந்நிலையில் திட்டமிட்டபடி, தலைநகர் டெஹ்ரானில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராகவும் எதிர்கட்சி கட்சி தலைவர் மோசாவிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அடித்து விரட்டினர். இந்த போராட்டத்தை படம் பிடிக்க வெளிநாட்டு மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதே போல் எகிப்து புரட்சியில் மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதில் சன்னி பிரிவு ஆட்சியாளர்களை குறை கூறும், ஷியா பிரிவு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஹ்ரைனில் 70 சதவீதம் மக்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என இவர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்த பேரணியில் கலவரம் ஏற்படும் என்பதால், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மனாமாவில் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.

பேரணியில் கலந்து கொள்பவர்களை கட்டுப்படுத்த போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தனர். மனாமாவை நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கலைத்தனர்

No comments

Powered by Blogger.