அரசாங்கத்தை விமர்சிக்கிறார், அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க
அமைச்சரவை அமைச்சர்கள் சரியான திட்டம் ஏதுவும் இன்றி நியமிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் இங்கிரியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசும்போது,
“ குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு பணியாற்ற கட்டடங்கள் இல்லை செயலாளர்களோ, வாகனங்களோ, அதிகாரிகளோ கூட வழங்கப்படவில்லை.
சிறந்த அரசாட்சிக்கும், தேசிய அபிவிருத்திக்கும் பொருத்தமான திட்டங்கள் தேவை.
விலைவாசி உயர்வு மோசமாக உள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க குறுகிய கால, நீண்டகாலத் தீர்வுத் திட்டங்கள் அவசியம்.
இதற்கெல்லாம் சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்“ .என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இநதக் கருத்து கொழும்பு அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் பதவி அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டதால் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருந்துள்ளார்.
தற்போது மூத்த அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் அவருக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை என்று கருதப்படுகிறது.

Post a Comment