யாழில் மீண்டும் பௌத்த தமிழ்ச் சங்கம் மானிப்பாயில் பௌத்த பாடசாலை
யாழ்ப்பாணத்தில் மீண்டும் பௌத்த தமிழ்ச்சங்கத்தை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அருள்நேசரத்தினம் ரவிக்குமார் என்பவர் இந்தச் சங்கத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் தொடக்கம் பௌத்த தமிழ்ச் சங்கம் இயங்கத் தொடங்கும் என்றும், இது தமிழர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமாக இருக்கும் என்றும் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு மானிப்பாயில் பௌத்த பாடசாலை ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளது.
அரசின் பின்புலத்துடனேயே இந்த அமைப்பை மீளவும் ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
1952ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த நிசங்க விஜேரட்ண பௌத்த தமிழ்ச் சிங்களத்தை உருவாக்கியிருந்தார்.
போர்ச்சூழல் காரணமாக இது முப்பதாண்டுகளாக செயற்படவில்லை

Post a Comment