Header Ads



யாழ்ப்பாணத்தில் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த வலிகாமம் பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம்(வயது-55) நேற்று நள்ளிரவு ஆயுதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதக்குழுவினர் வீட்டிலுள்ள தங்கநகைகளை கேட்டு ஆயுத முனையில் மிரட்டியுள்ளனர்.

தங்க நகைகளை அவர் வழங்கியபின் ஆயுதக்குழு அவரது மகளை பலவந்தமாக பாலியல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளது. இதனை தடுக்க கல்விப்பணிப்பாளர் முயன்றசமயமே அவர் மீது சரமரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு ஆயுததரிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

கல்விப் பணிப்பாளரின் சடலம் தற்போது யாழ் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் மேலதி விசாரiணைகளை மேற்கொள்கின்றனர். 

இச்சம்பவமானது யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.