மனிதன் முதலில் எங்கு தோன்றினான் மத்திய கிழக்கா? ஆபிரிக்காவா??
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் மனிதன் தோன்றினான். ஆப்பிரிக்காவில் அல்ல என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மனிதன் 2 லட்சம் ஆண்டு களுக்கு முன்பு ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றி யிருக்கலாம் என முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்தன. ஆனால் மனிதன் அங்கு தோன்றவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில்தான் தோன்றியிருக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள பென்குரியன் விமான நிலையத்தில் இருந்து 10 மைல் தூரத்தில் ரோஷ் ஹா அயின் பகுதி அருகே “குயூசெம்” என்ற இடத்தில் ஒரு குகை உள்ளது.
இந்த குகையில் இருந்து மனிதனின் பற்களை போன்று தோற்றமுடைய 8 பற்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண் டெடுத்தனர். அவற்றை டெல்அவில் பல்கலைக் கழகத்தில் வைத்து புதை பொருள் ஆராய்ச்சியாளர் கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அது மனிதனின் பல் என தெரிய வந்தது. 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் பல் என்றும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவை தற்போது வாழும் நவீன கால மனிதர்களின் பற்களை ஒத்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேட்டையாடுதல், சுரங்கங்களின் மூலம் கனிமங்களை வெட்டி எடுத்து ஆயு தங்கள் தயாரித்தல், தீயை உண்டாக்கி உணவு சமைத்து உள்ளிட்ட பணிகளை அவர் கள் செய்ததாக டெல் அவில் பல்கலைக்கழக பேரா சிரியர்கள் அவி கோப்கர், டாக்டர் ரான் பார்காய் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் பற்களை கண்டெடுத்த குகையில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றிய மனிதர்கள் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்துக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என முந்தைய ஆய்வு தெரிவித்தது. அவர்கள் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ஆண்டுக்குள் இங்கு குடியேறி இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Post a Comment