Header Ads



முஸ்லிம்களுக்கு தற்போதே பெரும் அச்சுறுத்தல் - என்.எம். அமீன்

நாட்டில் யுத்தம் நிகழ்ந்த காலத்தைவிட தற்போதே முஸ்லிம் சமூகம் அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக நவமணி பத்திரிகை ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற மறைந்த டேவிட் ராஜுவின் நினைவுதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுத்த காலத்தைவிட முஸ்லிம் சமுதாயம் இப்போதுதான் அதிக அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகிறது. பெரும்பான்மை சமூகத்தின் மனப்போக்கை மாற்றக்கூடிய பணிகளைச் செய்யவேண்டியுள்ளது.

எமது தொழுகைகளின் போது இதற்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். எமது எதிர்கால இருப்பை அல்லாஹ்விடம் கோருகிறோம். சகல மக்களும் உரிமையோடு வாழ வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் சார்பில் இச்சபையில் மறைந்த டேவிட் ராஜுவுக்காக அனுதாபம் தெரிவிக்கிறேன். பேதங்கள் பாராது ஒற்றுமையை வளர்த்த அவரை முஸ்லிம் மீடியா போரம் கௌரவித்ததில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.