மாத்திரை தொண்டையில் இறுகியது ! 2 வயது குழந்தை பரிதாப மரணம் !!
சுகயீனமாக இருந்த 2 வயது குழந்தைக்கு கொடுத்த மாத்திரை தொண்டையில் இறுகி மரணமான சம்பவமொன்று சிலாபம் ஆஸ்பத்திரியில் நடைபெற்றுள்ளது.
சிலாபம், பல்லம, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த பிங்குள ஜயசிங்க என்ற இரண்டு வயது குழந்தையே மாத்திரை தொண்டையில் இறுகி மரணமாகியுள்ளது.
காய்ச்சல் காரணமாக குழந்தையின் தாய் மாத்திரைகளை விழுங்குவதற்காக கொடுத்துள்ளார். மாத்திரை தொண்டையில் இறுகி அவதிப்படவே உடனடியாக சிலாபம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment