பேசும் படம் பகுதி - 22
இலங்கை வந்திருக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமாரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ ஆகியோர் சந்தித்தபோது பிடிக்கப்பட்ட படம்
குவைத் பிரதமரின் ராணுவ கொள்கை குறித்து கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்நது அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.கள் எழுந்து நின்று பிரதமர் பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
அரசு நிதியினை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் உக்ரைன் நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் யூரிலட்சென்கோ, அந்நாட்டு அரசினால் குற்றம்சாட்டபட்டு கைதுசெய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுமுறையினை குடும்பத்துடன் கொண்டாட ஹவாய் தீவுகளுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்குள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் , ஐஸ்கிரீமை ருசித்து மகிழ்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் 126-வது ஆண்டு தினத்தையொட்டி டில்லியில் நடந்தவிழாவில் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா கலந்து கொள்ள வந்தார். அருகில் காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் ஓரா.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இலவச கலர் "டிவி வழங்கும் பணி நேற்று துவங்கியது; "டிவி' வாங்க, தென்னம்பாளையம் பள்ளியை "மொய்த்த' பொதுமக்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா மிருகக்காட்சி சாலையில் கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள புலியை சிறுவர்கள் அருகில் இருந்து ரசிக்கும் காட்சி.
காத்திருங்கள்... சீனாவில் ஒவ்வொரு ஆண்டுக்கும் மிருகங்களின் பெயர்களை வைக்கப்படுகின்றன.தற்போது புலி ஆண்டு நடந்து வருகிறது. வருகிற பிப்ரவரி 3-ந்தேதி முயல் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் புலிக்குட்டி மற்றும் முயல்களை ஒன்றாக வைத்திருந்த காட்சி.
ரஷியாவில் உள்ள ரோஸ்டவ் நகரில் ஆசிய வகை யானை ஒன்று குட்டி போட்டுள்ளது. பிறந்து 6 நாட்களே ஆன அந்த குட்டி எழுந்து நிற்கும் காட்சி.
சிறுத்தையிடம் தப்பிக்க படிக்கட்டிலே ஓய்வு எடுத்தாலும், மனுசனுங்க இதுல தான் நடந்து போவோம்னு அடம் பிடிக்கறாங்களே இது நியாயமா... இதுக்காகவாவது ஒரு போராட்டம் நடத்தணும்.. ஆடுகள் ஓய்வெடுக்கும் இடம்: கோவை மாவட்டம் வால்பாறை டவுன் புதுமார்க்கெட்.
மனதை கொள்ளை கொள்ளும் பூ: பச்சை பசேலென செடிகளுக்கு நடுவே, அழகாய் சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூ கண்களுக்கு விருந்து படைக்கிறதோ...?











Post a Comment