பேசும் படங்கள் பகுதி - 21
எகிப்து, கெய்ரோவில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மகனும் தேசிய டேமாக்ரேடிக் கட்சியின் தலைவருமான காமல் முபாரக், செப்டம்பரில் வரவிருக்கும் அதிபர் தேர்தல் பற்றிய அறிக்கை குறித்து பேசினார்.
பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வலமிருந்து இரண்டாவது), பெனாசிர் பூட்டோவின் நினைவு நாளை முன்னிட்டு பிரார்த்தனை செய்தார்.
ஈராக்கில் புதிதாக பதவி ஏற்ற ஆயில் அமைச்சர் அப்துல் கரீம் எலைபிக்கு(இடது), பாக்தாத்தில் முன்னாள் ஆயில் அமைச்சர் ஹுசைன் அல் ஷாரிஸ்தானி(வலது) பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரேசிலில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வா, அதிபர் மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து போது காலை உணவு எடுத்து கொண்ட காட்சி.
சீனாவில் பிரதமர் வென் ஜியாபோ(இடது), தலைநகர் பிஜிங்கில் உள்ள சீனா நேஷனல் ரேடீயோவில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்தார்.
சென்னை வந்த மத்திய சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சென்னை அருகே உள்ள முதலைப் பண்ணைக்கு வந்து பார்வையிட்டார்.
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் விளையாட்டு போட்டி நடந்தது.இதில் யானைகள் கால்பந்து விளையாடிய காட்சி.
தென் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் ஏராளமான மான் சுற்றித்திரிகின்றன. அங்குள்ள உணவு விடுதிக்கு காலை வேளையில் வந்த மான்களுக்கு பணியாளர் ஒருவர் உணவு கொடுக்கிறார்.
இரை தேடி ஓடி அலைந்த பின்பு, சற்று நேரம் ஓய்வெடுத்து செல்லலாம் என கூட்டமாக இளைப்பாறுகிறதோ இந்த பறவைகள்....பறவைகள் கூடிய இடம்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செங்குளம்











Post a Comment