ஹக்கீம் ஹஜ் பெருநாள் வாழ்த்து
உலகிலும், இலங்கையிலும் துன்பங்களை அனுபவித்துவரும் முஸ்லிம்கள் அவற்றிலிருந்து மீள இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களாகிய நாம் உலகிலும், இலங்கையிலும் துன்பங்களை எதிர்நோக்கும் எம் சகோதரர்களின் துன்பம் போக்க பிரார்த்திப்போம் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சகல முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment