Header Ads



பெருநாள் கவிதை - யாழ் அஸீம்

தீனொளி எங்கள்
அகங்களில் தெரிநித்திட
தியாகத்தின் தீபங்கள்
அன்றுதான் ஒளியேற்றப்பட்டன
அந்த நாள்
ஒரு புதிய யுகத்தின் புத்தகத்துக்கு
தியாகத்தால் முகவரி எழுதிய நாள்!


இஸ்லாமிய நெஞ்சங்களே
ஈமானிய இதயங்களே
இன்று
எங்கள் ஈமானைக் கொஞ்சம்
உரசிப் பார்ப்போம்
தீன்வழி நடந்த
தியாகிகள் பாதையில்
தடம் பதித்துச் செல்கிறோமா?
தடம் மாறிச் செல்கிறோமா?

No comments

Powered by Blogger.