பிரிட்டன் பொலிஸாருக்கு பேஸ்புக் கைகொடுக்குமா..?
கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிடிக்க பொலிஸாருக்கு பிரிட்டனில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் ஏராளமானோர் இந்த வலைத்தளங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளும் சமூக வலைத்தளங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களை அந்த வலைத்தளங்கள் மூலமாகவே வலைவிரித்துப் பிடிக்க பிரிட்டனில் பொலீசாருக்கும் உளவாளிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 3.500 பேருக்கு இந்த பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் உறுப்பினர்களாக உள்ள குற்றவாளிகளை அடையாளம் காணுவது பின்னர் அவர்களுடன் தகவல் தொடர்பை வளர்த்து கொண்டு அவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் இதில் அடங்கும். கம்ப்யூட்டர் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படும்.


Post a Comment