முஸ்லிம்களின் யாழ்ப்பாண வெளியேற்றத்துடன் சிங்கள மக்களை ஒப்பிட்டுப் பேசியமையானது அரச அதிபரின் வரலாற்றுத்தவறாகும் - மாநகரசபையின் உறுப்பினர் பரஞ்சோதி சீற்றம்
வியாபாரம் செய்வதற்கும் காங்கேசன் சீமெந்து ஆலையில் பணியாற்றுவதற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் கடமைபுரியவும் வந்தவர்களே 80 83 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற சிங்கள மக்கள்.
அவர்கள் தாமாகத் தமது சொத்துக்களை எடுத்துக் கொண்டோ அல்லது விற்றுவிட்டோ அமைதியாகச் சென்றார்கள்.
இதைவிடுத்து யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் வரலாறு தெரியாமல் சிங்கள மக்களின் வெளியேற்றத்தை முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தோடு ஒப்பிட்டுப் பேசியது வரலாற்றுத் தவறாகும்.இவ்வாறு யாழ். மாநகரசபையின் உறுப்பினர் அ. பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் மக்களின் யாழ்ப்பாண வெளியேற்றம் சம்பந்தமாக அவர்களால் நடத்தப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவின் கலந்துரையாடலில் யாழ். அரச அதிபரால் பேசப்பட்டதாக வெளிவந்த செய்தியானது தமிழ்மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்க அதிபராக இருந்து கொண்டு உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிட்டு யார் யாருக்கோ அவர் விசுவாசமானவராகக் காட்டலாம். ஆனால் உண்மை வேறு. அச்செய்தியில் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை சிங்கள மக்களின் வெளியேற்றத்துடன் ஒப்பிட்டுப் பேசியது வரலாற்றுத்தவறாகும்.
முஸ்லிம் மக்கள் மொழியினாலும் சகோதரத்துவத்தாலும் யாழ். மக்களுடன் ஒன்றித்து வாழ்ந்தவர்கள். அவர்களுக்குச் சொந்தமாக நிலபுலம் வீடுஇசொத்துக்களுடன் பெரும் வர்த்தகர்களாகவும் இருந்தவர்கள்.
யாழ்ப்பாணத்திலே தமிழரைப்போல் அவர்களும் குறிப்பிட்ட பிரதேசங்களில் சொந்தமாக வாழ்ந்தவர்கள். இவர்கள் வெளியேற்றப்பட்ட போது இங்கு அரச நிர்வாகம் பெயரளவில் தான் இருந்தது. அப்படியான சூழ்நிலையில் அவர்கள் வெளியேற்றப்பட்ட போது பலர் கவலைப்பட்டார்கள்.
அவர்களுக்குத் தமது இழந்த சொத்துக்களுக்கான நஷ்ட ஈட்டைப் பெறுவதற்கும் சொந்த இடங்களில் குடியமர்வதற்கும் பூரண உரிமையுண்டு.
அது அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.ஆனால் 80ஆம் ஆண்டிலிருந்து 83ஆம் ஆண்டு வரை சிங்களவரின் குடியகல்வை மேற்படி சம்பவத்துடன் தொடர்பு படுத்துவதானது வரலாற்றை அவர் திசை திருப்பும் நோக்கமாகியுள்ளதைப் புலப்படுத்துகின்றது.
எண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழ்மக்கள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசப்பட்டதையும் அன்று பிடித்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை காணா மல் போயிருப்பதையும் அரச அதிபர் அறிந்திருப்பார் என்று கருதுகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிர்வாகமும் பாதுகாப்புப் பிரிவினரின் செயற்பாடும் மிக இறுக்கமாக இருந்ததையும் அரசாங்க அதிபர் அறிவார் என நினைக்கின்றேன். சிங்கள மக்களுக்கு இங்கு இருக்கும் வரை சகல பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கென இங்கு சிங்கள மகாவித்தியாலயம் இருந்ததை மட்டும் காரணமாக வைத்து அவர்கள் இங்கு நிரந்தரக் குடியிருப்பாளர்களென நிரூபிக்க முயல்வது அவரது இயலாமையே என எண்ணத் தோன்றுகின்றது.
அப்போதிருந்த சிங்கள மக்கள் வியாபாரத்துக்காகவும் காங்கேசன் சீமெந்து ஆலை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பிரிவுகளில் வேலை செய்யும் நோக்கத்துடனும் இங்கு வந்தவர்களே. அவர்களில் பலர் யாழ். மக்களின் கலை பண்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு நீண்டகாலமாக மாற்றலாகிச் செல்லாமல் வாடகை வீடுகளிலும் ஒரு சிறு தொகையினர் சொந்தமாகக் காணி வாங்கியும் இருந்தவர்களே.
இதைத் தெரியாமலோ அல்லது விசுவாசம் காரணமாகவோ இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் அரச அதிபர். அவரது இந்த நிலைப்பாடு வன்மையான கண்டனத்துக்குரியது.இன்னொரு விடயத்திலும் இவர் முந்திக் கொண்டு மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயமென எதுவுமில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளையும் மறுத்துச் செய்தி வெளியிட்டிருந்தார். இது கூட அவரது விசுவாசத்தின் வெளிப்பாடெனக் கருதவேண்டியுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணாண்டோ ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்இ உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியமர்த்த அரசாங்கம் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தாலும் எல்லா இடங்களிலும் குடியமர்த்த முடியாதெனவும் அவர்களுக்குத் தேவையானால் நஷ்ட ஈட்டையோ அல்லது பொருத்தமான வேறிடத்தில் காணியையோ வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் என்றுள்ளது.

Post a Comment