Header Ads



மீள்குடியேற விரும்பும் முஸ்லிம்களுக்கு மௌலவி சுபியானின் அறிவுரை

யாழ்ப்பாணத்திருந்து வெளியேற்றப்பட்டு நாட்டின் பலபகுதிகளிலும் வாழும் யாழ் முஸ்லிம்கள் தமது சொந்த தாயகப் பகுதியில் குடியேறுவதற்கு கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களை சந்தித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுமாறு மௌவி சபியான் அறிவுறுத்தியுள்ளார்.

மீளக்குடியேற விரும்புபவர்கள் தாம் தற்போது வாழும் பிரதேச கிராம சேவையாளரிடம் தாம் அந்தப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்தமைக்கான கடித மூலமான ஆதாரத்தைப்பெற்று தாம் தற்போது வாழும் பிரதேச செயலாளரிடம் அந்த கடிதத்தை ஒப்படைத்து, அவரிடமிருந்து மீளக்குடியேற விரும்பும் பிரதேச செயலாளரிடம் உறுதிப்படுத்திய கடிதமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


அக்கடிதத்தை மீள்குடியேறும் சொந்த இடத்தில் வீடு, காணி உள்ள பிரதேச கிராம சேவகரிடம் அப்பகுதியில் தன்னை பதியும்படி கோரும் கடிதமொன்றையும் இணைத்து ஒப்படைக்கவேண்டும்.

அவர் மீளக்குடியேற விரும்புபவரை விசாரித்து அவரது பிரதேச செயலாளருக்கு உறுதிப்படுத்துவார்.

பிரதேச செயலாளர் மீள்குடியேற்ற பதிவு இலக்கத்தையும், பங்கீட்டு அட்டையையயும் வழங்குவார். மீள்குடியேற்ற உதவிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்வார். காணிகள் துப்பரவு செய்வதற்கான கருவிகளும் வழங்கப்படும்.

அதேவேளை மீள்குடியேற்றப்பகுதிகளில் உடனடியாக தங்குவதற்கு வசதியில்லாதவர்களின் குடும்பத் தலைவர் மாத்திரம் சென்று இப்பதிவுகளை மேற்கொண்டுவிட்டு செல்லமுடியும். வீட்டுத்திட்ட உதவிகள் கிடைத்ததும் குடும்பத்துடன் மீளக்குடியேற முடியுமெனவும் மௌலவி சுபியான் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.