சிற்றுண்டிகள் விலை உயருகிறது


இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் (Short Eats) மற்றும் பராட்டா ஆகியவற்றின் விலைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இன்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், இந்த உணவுகளின் விலைகளைச் சிறியளவில் உயர்த்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.


பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் பின்னர் அதிகரிக்கப்படும் துல்லியமான விலைகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.