ஈரானிய ஆட்சியை அகற்றுமாறு நெதன்யாகு மொசாட்டிற்கு உத்தரவு


ஈரானிய ஆட்சியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மொசாட்  மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்குத் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர்  நெதன்யாகு குறிப்பிட்டார்.


தெஹ்ரானிடமிருந்து வரும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரே வழி இதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.


இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) அதிகாரிகள் பயிற்சிப் பட்டமளிப்பு விழாவில் பேசிய நெதன்யாகு, “இந்த அச்சுறுத்தலை நிரந்தரமாக நீக்குவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது: அது ஈரானில் உள்ள ஆட்சியை அகற்றுவதுதான். இது குறித்துதான் நான் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும், மொசாட்டிற்கும், பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறினார்.


“அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை, பயங்கரமான ஆயுதங்களைப் பெற அவர்கள் முயற்சிக்கும் வரை, இஸ்ரேல்  ஆபத்தான ஒரு சூழலை எதிர்கொள்கிறது” என்று கூறிய நெதன்யாகு, “நாட்டைக் காப்பாற்றுவது நமது கடமை, நம் அனைவரின் கடமையாகும்” என்று தெரிவித்தார்.


 நியுயோர்க் போஸ்ட் தகவல்

No comments

Powered by Blogger.