Header Ads



கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - கோடீஸ்வரன் Mp


கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சினை இன்றுடன் (18) முடிவுக்கு வந்துள்ளதாக கவிந்திரன் கோடீஸ்வரன் Mp தெரிவித்துள்ளார்.



கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 06 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 மூவின சுகாதார உதவியாளர்களுள் 09 பேர் இஸ்லாமிய பெண்களாவர். அவர்களது சீருடைப் பிரச்சினை தொடர்பாக சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவை அனுப்பியுள்ளது.


அதாவது குறித்த ஒன்பது இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு கிடைத்திருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.