Header Ads



ஓமானில் இருந்து அழைத்து வரப்பட்ட சமிட்புர சது


ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதான திமுது சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார். 


கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களில் ஒருவரான இவர், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட ஒருவராகக் கருதப்படுகிறார். 

No comments

Powered by Blogger.