9 முஸ்லிம் சகோதரிகளுக்கும் ஆதரவாக நிற்போம்
கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்பட்ட போதிலும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற 9 முஸ்லிம் சகோதரிகளும் பாராட்டப்பட வேண்டியர்வர்கள்.
இனவாத பிரச்சாரங்கள், அதிகாரிகளின் அச்சுறுத்தல் நிலவிய போதும் தமது உரிமையை விட்டுக் கொடுக்காமல், கலாசார உடைக்கு விடைகொடுக்காது நின்ற அந்த 9 முஸ்லிம் பெண் சகோதரிகளுக்கும் முஸ்லிம் சமூகம் நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம். முஸ்லிம் சட்டத்தரணிகள் கட்டணம் வசூலிக்காது ஆஜராக வேண்டும்.
அந்த 9 முஸ்லிம் பெண் சகோதரிகளுக்கும் சம்பளம் அல்லது வேறு தாமதங்கள் ஏற்படின் பள்ளிவாசல் நிர்வாகங்கள், ஊரில் உள்ள பணக்காரர்கள், சமூக அமைப்புக்கள் தமது உதவிகளை வழங்குதல் வேண்டும்.

Post a Comment