Header Ads



பௌத்த தேரரின் வேதனை


தற்போது இலங்கையில் வாழும் பௌத்த துறவிகளுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான காலப்பகுதி நிலவி வருகின்றது. வெளிநாடுகளில் வாழும் தேரர்களுக்கு நல்லதொரு கௌரவம் கிடைக்கும், உள்நாட்டில் உள்ள தேரர்கள் எங்கு சென்றாலும் தோட்டம் ஒன்றில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளியிடம் பேசுவதைப் போன்ற தொனியிலேயே சில மக்கள் தேரர்களை விளித்து உரையாடுகின்றனர். இந்த நிலைமை மிகவும் மனவருத்தத்ததுக்குரியதாகும் என பானகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.


ஆனால், இன்று இலங்கையில் வாழும் இளைஞர்களிடம் அந்த பக்தி பூர்வமான சிரத்தை அறவே இல்லை. தேரர் ஒருவர் வீதியில் சென்றாலும் அவர்கள் மதித்துப் பேச முற்படுவதில்லை. எப்படியாவது ஒரு தேரரின் குறையைத் தேடிப்பிடித்து, அவதூறுகளைப் பரப்பும் ஒரு மோசமான யுகமே நாட்டில் உருவாகியுள்ளது.


இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கடந்த 2, 3 நாட்களாக நான் ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். ஜனாதிபதியின் செயலாளருக்கு பல செய்திகளை அனுப்பிய போதிலும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதுமே மக்களுக்கு விரக்தி ஏற்படுகின்றது.


இலங்கையிலோ நாளுக்கு நாள் ஒழுக்க விழுமியங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே, எமது மக்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.


 பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், விகாரையின் ஊடாக முன்னெடுக்கப்படும் சமயப் பணிகளைத் தொய்வின்றி கொண்டு செல்வதற்கும் உங்களால் இயன்றளவு விகாரைக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்குங்கள். எமது தேரர்களின் சாசனப் பணிகளுக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.

No comments

Powered by Blogger.