புத்தளத்தை உலுக்கிய சம்பவம். நடந்தது என்ன..?
2 சகோதரிகளும் அருகருகே நீராடி மகிழ்ந்து கொண்டிருந்த போது, நீர் இழுத்துச் சென்றுள்ளது. சகோதரிகளை கடல் நீர் இழுத்துச் செல்வதைக் கண்ட சகோதரர், அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் பாய்ந்து உயிருக்காகப் போராடியுள்ளார்.
அதனையடுத்து அவரைக் காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனின் தந்தை முழுமையாக முயற்சி எடுத்தபோதிலும் பலனளிக்கவில்லை. குடும்பத்தினர் கண் முன்னேயே 2 சகோதரிகளும் அந்த இளைஞரும் நீருக்குள் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 2 சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக நீருக்குள் குதித்து உயிரிழந்த இளைஞரான இஸ்மத் முஹம்மது உஸாம், சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததுடன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக விடுமுறையில் நாட்டுக்கு வருகை தந்திருந்தார் என்றும், இம்மாதம் 26 ஆம் திகதி மீண்டும் தொழில் நிமித்தம் சிங்கப்பூருக்குச் செல்லவிருந்தார்.
பாத்திமா ரிஸ்கானா தில்லையடி - அல்ஜித்தாவில் இயங்கி வரும் பெண்கள் அரபு மதரஸா ஒன்றில் கல்வி கற்று, பட்டமளிப்பு விழாவுக்காகக் காத்திருந்தார். அவரது சகோதரியான ரம்ஸான் பாத்திமா ஸஹ்ரா O/L பரீட்சை எழுதிவிட்டுப் பெறுபேற்றுக்காகக் காத்திருந்தார்.
-ரஸ்மின்

Post a Comment