குவைத், பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் சுய பாதுகாப்பிற்காக நடத்தப்பட்டவை
குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தங்களின் சுய பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட "தற்காப்புத் தாக்குதல்கள்" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரானியப் படைகள் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே இலக்கு வைத்துள்ளது. ஏனெனில், அந்த இடங்களைத்தான் அமெரிக்கப் படைகள் சிவிலியன் கப்பல் போக்குவரத்தின் மீது தாக்குதல் நடத்தவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறவும் பயன்படுத்தி வருகின்றன. தடைகளாலும் போரினாலும் சாதிக்க முடியாத ஒன்றை, மேலும் ஒரு போரைக் கொண்டு வந்து சாதித்துவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதோ அல்லது ஈரானிய கடற்படை மீதோ எப்போதெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் தாக்குதல் எங்கிருந்து தொடங்கப்பட்டதோ அந்த இடத்தைக் குறிவைத்து ஈரானிய இராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment