பிக்குகள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு
இலங்கையில், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த பீடங்களின்; மகாநாயக்க தேரர் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நடைமுறை மிகவும் அவசியமானது என வலியுறுத்தப்பட்டு, மகாநாயக்க தேரர்களுக்கும் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், பதிவாளர் பதிவு தேரர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு இடையே அவசரக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

Post a Comment