குவைத் ஏர்வேஸ் கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கிறது - தகுதியுள்ள பயணிகளுக்கு சவூதி ஊடாகப் பயணிப்பதற்கான இலவச போக்குவரத்து விசா
வாராந்தம் புதன்கிழமைகளில் இந்த விமான சேவை பின்வருமாறு இயக்கப்படும்.
குவைத்திலிருந்து புறப்பாடு: அதிகாலை 01:30 மணி - கொழும்பு வருகை: மாலை 18:05 மணி
கொழும்பிலிருந்து புறப்பாடு: இரவு 19:05 மணி - குவைத் வருகை: அதிகாலை 03:30 மணி
விமான சேவையை ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல், தகுதியுள்ள பயணிகளுக்கு சவூதி அரேபியா ஊடாகப் பயணிப்பதற்கான இலவச போக்குவரத்து விசா வசதியையும் குவைத் ஏர்வேஸ் வழங்குகிறது.
விசாவிற்குத் தகுதியுள்ளவர்களுக்கான நிபந்தனைகள்
பயணிகள் செல்லுபடியாகும் குவைத் வதிவிட அனுமதியைக் கொண்டிருக்க வேண்டும்.
வதிவிட அனுமதியின் செல்லுபடியாகும் காலம் 3 மாதங்களுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
கடவுச்சீட்டு குறைந்தது 6 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும்.
பதிவுகள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கொழும்பிலுள்ள குவைத் ஏர்வேஸ் விற்பனை குழுவைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment