இப்படியும் திருடுகிறார்கள்
சட்டவிரோத முறையில் டீசல் தொகையைச் சேகரித்துத் தம்வசம் வைத்திருந்த 4 நபர்கள் 19,060 லீற்றர் டீசல் அடங்கிய 2 பவுசர் வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி வீதியில் பயணிக்கும் லொறிகள், டிப்பர் வாகனங்கள் மற்றும் பிரைமூவர் போன்ற வாகனங்களுக்குப் பணம் வழங்கி, அவ்வாகனங்களின் தாங்கிகளிலிருந்து டீசலைப் பெற்று, தாங்கள் தயாரித்துள்ள தாங்கிகளில் சேமித்து விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாகனங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார்கள் பொருத்தப்பட்ட 02 குழாய்கள், 16 இரும்புப் பீப்பாய்கள் மற்றும் 381,000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 22, 32 மற்றும் 42 வயதுடைய ஹெய்யந்துடுவ, திஹகொட மற்றும் நெலும்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேகநபர்கள் இன்று (12) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment