10 வயதிற்கு குறைந்த சிறார்களில் 30 நோன்புகளையும் முழுமையாக நோற்றவர்களுக்கு பெருநாள் காசு
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பிரதான திடல் தொழுகை யாழ் மர்யம் ஜுமுஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
இன்றை தொழுகையில் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் விசேட குத்பா உரையினை மொளலவி எம்.ஏ.பைசர் (மதனி) நிகழ்த்தியிருந்தார். நோன்பின் மகத்துவம், நோன்புப் பெருநாளின் முக்கியத்துவம், பெருநாள் தினத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய மார்க்க கடமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பெருநாள் உரை அமைந்திருந்தது.
மேற்படி பெருநாள் திடல் தொழுகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
என்.எம்.அப்துல்லாஹ்



Post a Comment