சாதனை படைத்த போட்டி
இந்தியா - பாகிஸ்தான் போட்டி டிஜிட்டல் முறையில் அதிகம் பார்க்கப்பட்ட T20 போட்டியாக சாதனை படைத்துள்ளது. 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை 163 மில்லியன் மக்கள் டிஜிட்டல் முறையில் பார்த்ததனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2024 ரி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ரி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்த்த மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த முறை பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 56% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment