துறவற வாழ்க்கையில் ஈடுபட கோட்டாபய திட்டமா..?
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய துறவற வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பங்காற்றிய அவர், பதவி துறந்து நாட்டைவிட்டு வெளியேறிய முதல் ஜனாதிபதியாகவும் பதிவானார்.
தற்போது தகவல்களுக்கமைய, கோட்டாபய பௌத்த தத்துவத்தில் அதிக நாட்டம் கொண்டு தனது நேரத்தைச் செலவிடுவதாகக் கூறப்படுகிறது. வெளிநபர்களுடன் தனது தொடர்பை முடிந்தவரை குறைத்துக்கொண்ட அவர், தியானத்தில் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த தத்துவம், ஆழ்ந்த தியான முறைகள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களைப் படிப்பதிலும், அவற்றில் உள்ள தர்மத்தைப் படிப்பதிலும் அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார். அவர் துறவறம் பூணும் முடிவை எடுத்தால், இலங்கை வரலாற்றில் இல்லறத்தைத் துறந்து துறவத்தில் இணையும் முதலாவது ஜனாதிபதியாக பதிவாகுவார்.

Post a Comment