இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள சவுதி நிதியம்
'டிட்வா' சூறாவளியால் சேதமடைந்த இலங்கையிலுள்ள வீதிகளை புதுப்பிப்பதற்காக 6 மில்லியன் டாலர்களை வழங்க சவுதி நிதியம் இணங்கியுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி நிதியத்தின் உயர் அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய விளைவுகள் மற்றும் பேரழிவை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ரத்நாயக்க எடுத்துரைத்தார். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றமும் இதில் அடங்கும்.
சவுதி நிதியம் தற்போது இலங்கையில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது, மேலும் டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை சரிசெய்ய கூடுதலாக 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment