நமது தேசம், ஒருபோதும் திவாலாகாது - ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவிப்பு
2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் முறையான நிதி ஒழுக்கத்தையும் தெளிவான இலக்குகளையும் பின்பற்றி வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இது முன்னைய நிலமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2 ட்ரில்லியன் ரூபா முன்னேற்றமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Post a Comment