Header Ads



இன்றும் ஐஸ் போதைப்பொருளுக்காக கொண்டுவரப்பட் ஒருதொகை இரசாயனம் மீட்பு


தங்காலை, நெடோல்பிட்டியில் உள்ள காணியில் இன்று (07) ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக கொண்டுவரப்பட் மேலும் ஒரு தொகை இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


குறித்த பகுதி மக்கள் வழங்கிய தகவலின் படி தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இன்று காலை நாடோல்பிட்டியவில் உள்ள காணியில் நடத்திய சோதனையின் போது, இந்த இரசாயனம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அந்த காணியில் வெள்ளை நிற இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த இரசாயனங்கள் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயனமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.  நேற்று மித்தெனியவில் உள்ள தலாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்களுடன் ஒத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.