Header Ads



ஹஜ்ஜை முடித்துவிட்டு வரும்போது குருக்கள் மடத்தில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்களை தோண்டி எடுக்க உத்தரவு


1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்ரீகர்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் சார்பில் ஏ.எம்.எம். ரவூப் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 


இதன்போது, சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தி, பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு நாளை (26) காலை 9:30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்

No comments

Powered by Blogger.