Header Ads



ஒரே மாதத்தில் 235 பில்லியன் ரூபாய் வருவாய்


சுங்கத்துறை வரலாற்றில் ஒரே மாதத்தில் அதிகபட்ச வருவாய் கடந்த மாதம் பதிவாகியுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் நோனிஸ் தெரிவித்துள்ளார். 


இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வசதிக்காக இலங்கை சுங்கத்தால் உருவாக்கப்பட்ட சுங்கப் பதிவு அறிவிப்பு முறையின் தொடக்க விழாவில் நேற்று (15) பங்கேற்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். 


இந்த நிகழ்வில் பேசிய சுங்க பணிப்பாளர் நாயகம், கடந்த மாதம் ரூ. 235 பில்லியன் சுங்க வருவாய் கிடைத்ததாக கூறினார். 


மேலும் பேசிய சுங்க பணிப்பாளர் நாயகம், 


"கடந்த மாதம், எங்கள் மாதாந்திர சுங்க வருவாய் ரூ. 235 பில்லியனாக இருந்தது. 


இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் ஒரு மாதத்தில் இதுவரை பெறப்பட்ட அதிகபட்ச வருவாய் இதுவாகும். 


இது 2023 ஆம் ஆண்டில் ரூ. 100 பில்லியனாக காணப்பட்டது. 


ஆனால் இன்று ரூ. 235 பில்லியனைத் தாண்டிய நிலையை அடைந்துள்ளோம்." என்றார்.

No comments

Powered by Blogger.