புதிய அறிவியல் கண்டுபிடிப்பும், அன்றே துல்லியமாக கூறிய குர்ஆனும்
வியக்கவைக்கும் பிரபஞ்ச அத்தாட்சி என்ன..?
சிலிக்கான் எனும் கனிமம் நிறைந்த பகுதியில் ஓர் உடல் புதைக்கப்பட்டால் அந்த உடலின் எலும்புக்கூடு காலப்போக்கில் பாறையாகவும் கல்லாகவும் மாறிவிடும்.
அதேவேளை "போலித் தங்கம்" என்று அழைக்கப்படும் பைரைட் கனிமம் நிறைந்த பகுதியில் ஒருவர் புதைக்கப்பட்டால் அந்த உடல் இரும்பாக மாறிவிடும்.
இந்த அறிவியல் உண்மைகள் சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் 1445 வருடங்களுக்கு முன்பே வியக்கத்தக்க வகையில் மிகத் துல்லியமாக குர்ஆன் இதனைக் குறிப்பிடுகிறது:
"அவர்கள் கேட்கிறார்கள்: நாங்கள் வெறும் எலும்புகளாகி மண்ணோடு மண்ணாகிய பிறகு மீண்டும் புதிய படைப்பாய் எழுப்பப்படுவோமா?
நபியே! அவர்களிடம் நீர் கூறும்: நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகிவிடுங்கள்'' (17:49,50)
சில குறிப்பிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட உடல்கள் கற்களாகவோ, இரும்புச் சிலைகளாகவோ மாறியிருந்தன என்பதை சமீபத்தில்தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்களின் வகைகளை இந்த வசனம் தெளிவாகக் குறிக்கிறது.
நண்பகல் சூரியன் போன்று தெள்ளத் தெளிவாக குர்ஆன் கூறும் இந்த அதிசயத்தை பகுத்தறிவுள்ள எவர்தான் மறுப்பார்?
(நூஹ் மஹ்ழரி)

Post a Comment