கல்விமான் கலாநிதி அலவி ஷரீப்தீன் பாராட்டு விழா
அன்னாரின் கல்வி வலுவூட்டல் மற்றும் சமூக சேவையை முன்னிலைப்படுத்தும் சமூகப் பணிகளில் ஒன்றான கபொத சா/த பரீட்சையில் சிறப்பான புள்ளிகள் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் விழா காத்தான்குடி மத்திய கல்லூரி மண்டபத்தில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்றது.
இந்த விழா, கலாநிதி் அவர்கள், தான் நிறுவிய கல்விச் சகாய புலமை நிதியின் கீழ் உதவி பெற்ற மாணவர்கள் மற்றும் கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலைகளில் கல்வி கற்று கபொத கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களை கௌரவிப்பதற்காக நடைபெற்றது.
இம் மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களினால் வழங்கப்பட்டன.
அதி உச்ச புள்ளி பெற்ற மாணவர்களுக்கு கல்விமான் கலாநிதி ஷரீப்தீன் அவர்களால் ரூ10,000 ரொக்க பரிசுகள், நினைவுக் கேடயங்கள், பல பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்ட இந்த விழாவில், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு அதிதிகள், பெற்றோர்கள், சமூக பணி ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். மண்டபம் நிறைந்த கோலாகலமான நிகழ்வாக இது் அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்கள் விசேடமாக அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்திருந்தார்கள்.
அத்தோடு மாணவர்களின் பெற்றோர்களுக்கு மாணவர்களால் அடையாள மலர் அன்பளிப்பொன்றும் நன்றியின் சின்னமாக வழங்கப்பட்டது.
இவ்விழா, எவ்வித இலாப நோக்கமின்றி நடாத்தப்படும் கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் கல்விப்பணியினையும், நாதியற்ற தந்தையில்லாத பிள்ளைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் உதவியும் செய்யும் பணியினையும் நோக்காகக் கொண்டவை என கல்விமான் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
விடிவெள்ளி பிரதம ஆசிரியர் பைரூஸ் புஹாரி, இலங்கை ஒலிபரப்பு நிலைய செய்தி வாசிப்பாளர் ஸீ எம் எம் ஸுபைர், WynSys நிறுவன உரிமையாளர் ஸியாம், சட்டத்தரணி ஸமீர், ரிஸாம் ஆசிரியர், மூஸா கலீம், அஹ்மத் ஹாதி உட்பட அவுஸ்திரேலியாவில் இருந்து கலாநிதி அவர்களின் நண்பர் ஹுதைபா அக்பர் அலி மற்றும் மொனாஷ் சட்டபீட மாணவர் தல்ஹா, முன்னணி ஆசிரியர்கள், வலய அதிபர்கள், சமூகப்பணி ஆர்வலர்கள் என பலர் அதிதிகாகக் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு ஏனைய சமூகப்பணி நிறுவனங்கள் கல்விப்பணியினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது.

Post a Comment